பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான புதிய மற்றும் திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள சுற்றறிக்கையில் காணப்படும் பல குறைபாடுகளை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அவரது விளக்கத்தில், புதிய சுற்றறிக்கையின் ஊடாக சட்டவிரோத மற்றும் முறையற்ற மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மேலும், யதார்த்தமாக பாடசாலைகளுக்குத் தகுந்த மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனுடன், முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கும் புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.