பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளுக்கான மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் 28 முதல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ் . இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். மாணவர்கள் கீழ்க்காணும் வழிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk க்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் பரீட்சைத் திணைக்களத்தின் மொபைல் செயலி (DOE) ஊடாகவோ Exam Information Centre இணையதளம் onlineexams.gov.lk/eic ஊடாகவோ விண்ணப்பிக்க முடியும்.

மேலும் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பித்தவர்கள், Z-Score அல்லது தரங்களில் உயர்வு அல்லது தாழ்வு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால், இது குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டால், கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளலாம்.

இணைய வழி கிளை: 011-3661122, 011-3671568

பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை: 011-2785231, 011-2785681

மேலும் உதவிக்கு, உத்தியோகபூர்வ இணையதளங்களைப் பார்வையிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.