வடக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் மழை; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் (17) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டரை (mm) மிஞ்சும் பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேல், வடமத்திய, தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னலுடன் கூடிய மழை காலங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.