முட்டை விலையில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி!

தற்போது இலங்கையின் பல சந்தைகளில் முட்டையின் விலை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக நுகர்வோர் மற்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, ஒரு முட்டை தற்போது ரூ.23 முதல் ரூ.29 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சமீபத்திய புத்தாண்டு காலத்தில் முட்டையின் விலை ரூ.47 முதல் ரூ.50 வரை உயர்ந்திருந்தது. ஆனால், தற்போது சந்தையில் முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால், விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வகை விலை மாற்றங்கள், இறைச்சி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரத்தையும் பாதிக்கக்கூடும் என நுகர்வோர் நம்புகின்றனர்.