சந்தையில் எகிறிய முட்டை விலை!

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாக காணப்பட்ட முட்டையின் விலை தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பண்டிகை காலம் இருக்கின்ற நிலையில், முட்டையின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதின் படி, முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலவரத்தில், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து, முட்டை உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த விலை உயர்வு, மக்கள் வாழ்க்கையை பாதிப்பதாகவும், அதற்கு உரிய தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.