வவுனியா KFC உணவகம் சுகாதார குறைபாடுகள் காரணமாக 14 நாட்களுக்கு மூடல்

வவுனியா நகரில் இயங்கி வந்த பிரபலமான KFC உணவகம், சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, உணவகத்தில் சுகாதார விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தேவையான திருத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி, நீதிமன்ற கட்டளையின் அடிப்படையில் 14 நாட்கள் உணவகத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வவுனியா நகரின் கண்டி வீதியில் அமைந்துள்ள KFC உணவகத்திற்கு பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.