காதல் விவகாரத்தில் மோதல் – தொம்பேவில் இளைஞர் கொலை
கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தற்போது தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், காதல் தொடர்பான பிரச்சினையே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை
