மின்சாரம் தாக்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்
கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் ஏற்பட்ட மின்சார விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் இன்று (07) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும், 13 வயதுடைய அவரது மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேலைக்குச் சென்றிருந்த 24 வயதுடைய இளைஞன் வீட்டிற்கு திரும்புவதற்குள் இந்த பெரும் சோக சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, கருவேப்பிலை மரத்தில் இலைகளை பறித்துக் கொண்டிருந்த போது தரையில் விழுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கியதன் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கலகா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
