FCID-க்கு இன்று ஷிராந்தி ராஜபக்ஷ ஆஜர்; நாமல் ராஜபக்ஷ CID விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் (03) காலை 9.30 மணிக்கு FCID-இல் ஆஜராகுமாறு அவருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன், கடந்த 27 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக வருமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும், தனிப்பட்ட காரணங்களால் அன்றைய தினம் வர இயலாது என சட்டத்தரணி ஊடாக அறிவித்து, இரண்டு வார அவகாசம் கோரியிருந்தார். இருப்பினும், இன்று மீண்டும் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் FCID-க்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவையும் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் வெளிநாட்டில் இருந்த காரணத்தால் வேறு ஒரு திகதி கோரியிருந்த நிலையில், அதற்கமையவே புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
.png)