உலக சந்தையில் தங்க விலை வேகமாக சரிவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாகக் குறைந்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் திருப்தி காணப்படுகிறது. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஒப்பந்தமே இதற்கான முக்கிய காரணமாகும் என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,737 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை
.png)