ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை: மைத்ரி விக்ரமசிங்க CIDக்கு அழைப்பு

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் துணைவியாரான மைத்ரி விக்ரமசிங்க, இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களம் கீழ் செயல்படும் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று குறித்த பிரிவில் ஆஜராகுமாறு, கடந்த 18ஆம் திகதி CID கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததையடுத்து, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்க CIDக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.