கோப்பாயில் பயங்கரம்: காணித் தகராறில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை!
யாழ்ப்பாணம் கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில், நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை (16) இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், கோப்பாய் மத்திய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், மண்வெட்டியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே மரணத்திற்குப் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பலியானவரின் உடல் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு, கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை
