சர்வதேச சந்தை தாக்கம்; இன்று தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று, நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் சிறிய அளவில் குறைவடைந்துள்ளது. நேற்று ஒரு அவுண்ஸ் தங்கம் 5,000 அமெரிக்க டொலராக வர்த்தகமான நிலையில், இன்று அது 4,924 டொலராக குறைந்துள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் சரிவை சந்தித்துள்ளது. நேற்று ஒரு அவுண்ஸ் வெள்ளி 76.35 டொலராக பதிவாகியிருந்தது, இன்று அது 73.4 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

இந்த சர்வதேச விலை மாற்றங்களின் தாக்கமாக, உள்நாட்டு சந்தையிலும் இன்று (17) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய விலை நிலவரத்தில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,088 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.