மின்விசிறி பழுது சரிசெய்ய முயன்ற போது வங்கி ஊழியர் பலி
கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட மின்சார விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவரான அவர், நீர்கொழும்பிலுள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணிநிமித்தமாக நீர்கொழும்பில் வாடகை வீட்டில் தங்கி இருந்த நிலையில், நேற்றிரவு அந்த வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை
