இலங்கையில் 15 தனியார் ஜெட் விமானங்கள் தரையிறக்கம் – காரணம் என்ன?


இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் ஒரு பகுதியாக, பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் நோக்கில், உலகின் பல நாடுகளிலிருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த தனியார் விமானங்கள் பெப்ரவரி 14ஆம் திகதியிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவ்விமானங்களின் மூலம் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பல முக்கியஸ்தர்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜே. ஷா மற்றும் பல கோடீஸ்வர வர்த்தகர்களும் நாட்டுக்கு வந்திருந்தனர்.

போட்டி முடிவடைந்ததையடுத்து, வருகை தந்த அனைவரும் தாங்கள் இலங்கைக்கு வந்த அதே தனியார் ஜெட் விமானங்களிலேயே மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.