எரிவாயு தட்டுப்பாடு; வவுனியாவில் மக்கள் அவதி
வவுனியா பகுதியில் கடந்த சில தினங்களாக லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை முதல் இந்த நிலைமை காணப்பட்டுவருவதுடன், நகர்ப்பகுதியில் உள்ள பெரும்பாலான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முழுமையாக தீர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்திலிருந்து வழக்கம்போல விநியோக லொறிகள் வராததே இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், இன்னும் சில தினங்களில் நிலைமை சீரடையும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:
இலங்கை
