இடியுடன் கூடிய மழை: வடக்கு, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களுக்கு எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் வரும் சில நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடையிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஏற்படலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை
