திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – நான்கு பிக்குகள் பிணையில் விடுதலை
திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர், கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இவர்கள், இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் தாக்கல் செய்த பிணை மனு இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையின் முடிவில், இன்று வரை விளக்கமறியலில் இருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட அனைவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
Tags:
இலங்கை
