யாழ். ராணி ரயில் விபத்து: மல்லாகம் பகுதியில் வயோதிபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலுடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை
.jpeg)