உச்சத்துக்குப் பின் தங்க விலை வீழ்ச்சி – வாங்குவோருக்கு நல்ல செய்தி
கொழும்பு செட்டியார்தெரு சந்தைத் தகவல்களின் அடிப்படையில், இன்று (02.02.2026) 24 கரட் தங்கப் பவுணின் விலை 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதே நேரத்தில், 22 கரட் தங்கப் பவுணின் விலை 349,600 ரூபாவாக நிலவி வருகிறது.
கடந்த வாரம் தங்க விலை வரலாற்றில் முதன்முறையாக சுமார் 4 இலட்சம் ரூபா அளவிற்கு உயர்ந்திருந்தது. எனினும், தற்போதைய நிலவரத்தில் தங்க விலையில் சரிவு நோக்கிய மாற்றம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
உலக சந்தை நிலவரம்
அதேவேளை, உலக சந்தையிலும் தங்க விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,660 முதல் 4,700 அமெரிக்க டொலர் வரையிலான மட்டத்தில் காணப்படுகிறது.
சமீப காலத்தில் 5,000 டொலர் வரை உயர்ந்திருந்த தங்க விலை, தற்போது 4 முதல் 7 சதவீதம் வரையிலான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் கூறுகின்றன.
Tags:
இலங்கை
.png)