மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் உரசிய சம்பவம் - பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது
இந்தியாவில் இரண்டு விமானங்கள் ஒருவரையொருவர் உரசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, மராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மும்பையில் இருந்து கோவாவுக்கு செவ்வாய்க்கிழமை (03) இரவு புறப்பட தயாராகியிருந்த எயார் இந்தியா விமானம், பயணிகள் அனைவரும் ஏறிய பின்னர் ஓடுதளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
அதே நேரத்தில், ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் ஓடுதளத்திலிருந்து விமான நிறுத்தும் பகுதிக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில், இரு விமானங்களின் வலது பக்க இறக்கை முனைகள் லேசாக ஒன்றோடு ஒன்று உரசியதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சம்பவ நேரத்தில் விமானங்களின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பெரிய சேதம் ஏற்படவில்லை எனவும், எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு விமானங்களும் உடனடியாக விமான நிறுத்தும் பகுதிக்குத் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)