ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு: விசேட வர்த்தமானி வெளியீடு

 

இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கும் போட்டித் தேர்வு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் விண்ணப்பங்களை நாளை (05) காலை 9.00 மணி முதல் 19ஆம் திகதி இரவு 9.00 மணி வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.