இலங்கையில் தாறுமாறாக உயரும் தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம் என்ன?



உலக சந்தையில் தொடர்ந்தும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு போக்கு பதிவாகி வருகிறது. 

அதற்கமைய இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5278 டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 93.72 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம் கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை 1.94 சதவீதத்தால் அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 372800 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 403000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.