உலக சந்தை உயர்வு எதிரொலி: இலங்கையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (10) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,020 அமெரிக்க டொலராக நிலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை நிலவரம்
மேலும், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 81.36 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்த உலக சந்தை மாற்றங்களின் தாக்கமாக, இலங்கையிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கையில் இன்று 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 399,200 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 366,080 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Tags:
இலங்கை
