லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பான புதிய அறிவிப்பு


மாதாந்த விலை மறுஆய்வின் அடிப்படையில், பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நுகர்வோர் முன்பிருந்த விலையிலேயே எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டர் 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் சிலிண்டர் 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாப் சமையல் எரிவாயு விலை மாற்றம்

இதற்கிடையில், கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லாப் சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், 12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, முன்பு 4,250 ரூபாவாக இருந்தது தற்போது 4,330 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 5 கிலோ கிராம் லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாயால் உயர்த்தப்பட்டு, தற்போது 1,742 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.