யாழ்ப்பாணம் பொன்னாலையில் கோர விபத்து: பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - ஒருவர் பலி.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிடைத்த தகவல்களின் படி, பொன்னாலை சந்தியிலிருந்து மாதகல் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

பயணத்தின் போது, மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதுடன், மற்றையவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.