வவுனியா வாரிக்குட்டியூரில் உந்துருளி விபத்து: மாணவன் உயிரிழப்பு
வவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று (05) நிகழ்ந்த உந்துருளி விபத்தில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர், வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவகுமார் கரிஸ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உந்துருளியில் இரு மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்த ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
