இலங்கையில் தங்க விலை திடீர் உயர்வு

இலங்கையில் இன்று (07) தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களின் தாக்கம் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதன்படி, தற்போது 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 362,600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,325 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.