நெடுந்தீவு பயணிப் படகில் மதுபான ரின்கள்; பயணிகள் விசனம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற படகில், கடற்படையினர் மதுபான ரின்களை எடுத்துச் சென்றதாகக் கூறி பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிகாட்டுவானிலிருந்து திங்கட்கிழமை மாலை நெடுந்தீவை நோக்கி புறப்பட்ட “நெடுந்தாரகை” என்ற படகில், கடற்படையினரால் கணிசமான அளவிலான மதுபான ரின்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் படகில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பயணித்திருந்த நிலையிலும், இவ்வாறு மதுபான ரின்கள் கொண்டு செல்லப்பட்டமை பயணிகள் மத்தியில் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், பொதுப் போக்குவரத்து சாதனத்தில் கடற்படையினர் அதிகளவிலான மதுபான ரின்களை எடுத்துச் சென்றதையடுத்து, இதுகுறித்து பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
