முன்னாள் அமைச்சரின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல மீண்டும் கைது

 

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 300 மில்லியன் ரூபாய் தொடர்புடைய பணமோசடி சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் காவலில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கமைய கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமித்ரி ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.