சாதாரண தரப் பரீட்சை காலத்தில் வகுப்புகள் நடத்தினால் சட்ட நடவடிக்கை

 

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.

இதனை முன்னிட்டு, சாதாரண தரப் பரீட்சைக்குத் தொடர்புடைய கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதற்கு 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தடை பரீட்சைகள் நிறைவடையும் வரை அமலில் இருக்கும் எனவும், இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் 3,545 பரீட்சை மையங்களில் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சைகளை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.