களுத்துறை – பேருவளை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் காயம்
களுத்துறை – பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளில் பயிலும் மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (5) நடைபெற்றதாக அளுத்கம காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விசேட வகுப்பில் கலந்து கொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை
