இலங்கையில் தங்க விலை: வரலாற்று உயர்வுக்குப் பிறகு வீழ்ச்சி பதிவு
கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 3,56,100 ரூபாவாக நிலவுகிறது. அதே நேரத்தில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 3,85,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தை நிலவரத்தைப் பொறுத்தவரை, இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,870 முதல் 4,890 அமெரிக்க டொலர் வரையிலான வரம்பில் காணப்படுவதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அண்மையில், வரலாற்றில் முதன்முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை கடந்திருந்தது. அதேபோன்று, இலங்கையிலும் தங்க விலை முதல் முறையாக 4 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி தங்க விலையில் ஓரளவு சரிவு காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.png)