விரட்டி விரட்டிக் கொட்டிய குளவிகள்: கிளிநொச்சி பள்ளி மாணவர்கள் 39 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு ஒன்று கலைந்து, அதில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில், இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. சம்பவத்தின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் மற்ற மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பின்னர் நோயாளர் வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர், மற்ற மாணவர்கள் கிளிநொச்சி ரோட்ரிக் மைதானத்திற்கு மாற்றப்பட்டனர்.
குறித்த குளவி கூட்டு தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு பாடசாலை நிர்வாகத்துக்கு அகற்ற கோரிக்கை எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
.png)