கண்டி வாவியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
கண்டி நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி வாவியில் ஆணொருவர் உயிரற்ற நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (31) மதியம் பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் விபரம்
இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடையவராகவும், குறுகிய சுருள் முடி கொண்டவராகவும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நீல நிற சட்டை மற்றும் கருப்பு நிற நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
நீதவானின் பரிசோதனைகளுக்குப் பின்னர், சடலம் கண்டி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.png)