நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 9-வது பட்ஜெட்: இலங்கைக்கு கூடுதல் நிதி
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய நாடாளுமன்றத்தில் 2026–27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். இது அவர் முன்வைக்கும் ஒன்பதாவது பட்ஜெட்டாகும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாய வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியை இந்த ஆண்டு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கைக்கான நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.
இந்த நிதி, இலங்கையில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)