மொரட்டுவை கடற்கரையில் பெண் சடலம் மீட்பு: விசாரணை தீவிரம்

கொழும்பு, மொரட்டுவை - கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், அண்மையில் குறித்த பெண்ணுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்களை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.