யாழ்ப்பாணத்தில் அதிரடி: 1000 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு - பருத்தித்துறை நீதிமன்றம் நடவடிக்கை!
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள கஞ்சா போதைப்பொருள் நேற்று (22) தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய பொலிஸ் பிரிவுகளால் பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள், நீதிமன்ற நடவடிக்கைகளின் முடிவில் அழிக்கப்பட்டுள்ளது.
குடத்தனை வலிக்கண்டி பகுதியில் இடம்பெற்ற இந்த அழிப்பு நடவடிக்கையானது, பருத்தித்துறை நீதவானின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
Tags:
இலங்கை
