தங்க விலை புதிய உச்சத்தில் – நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி
இன்று (23.02.2026) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,107 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியை ஒப்பிடுகையில் இது 44 டொலர் அதிகரிப்பாகும், சுமார் 0.95% உயர்வாகும். உலக பொருளாதார சூழல் மற்றும் அரசியல் காரணங்கள் தங்க விலை தொடர்ந்தும் உயர்வாக இருப்பதற்குத் தூண்டுதலாகின்றன.
வெள்ளியின் விலை மேலும் 2 டொலர் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டொலராக பதிவாகியுள்ளது.
உள்நாட்டு சந்தை நிலவரம்
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தகவலின்படி, கடந்த வார இறுதியில் கொழும்பு சந்தையில் 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 396,000 ரூபா, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 366,300 ரூபா இருந்தது.
இன்று சர்வதேச சந்தை நிலவரத்தின் காரணமாக, உள்நாட்டில் 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 400,000 ரூபா, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 370,000 ரூபா ஆக உயர்ந்துள்ளது என சங்கம் தெரிவித்துள்ளது.
