களுத்துறை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: சாரதிகள் இருவர் படுகாயம்!


களுத்துறை மாவட்டத்தில் உள்ள வாத்துவ – மொரந்துடுவ பிரதான வீதியின் மெலேகம பகுதியில், இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நடந்த சமயத்தில், இரு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இல்லாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்த இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.