யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸில் புதிய தமிழ் பொறுப்பதிகாரி நியமிப்பு
யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி. நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அந்தப் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த அதிகாரி பிறடோ அவர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து, புதிய பொறுப்பதிகாரியாக சி. நிதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தமிழ் மொழி தெரியாத சிங்களம் பேசும் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைக்க முடியாத நிலை காணப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்தப் பின்னணியில், தமிழ் மொழி அறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது மக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்துவதற்கும், பொது சேவைகளை மேலும் பயனுள்ள வகையில் முன்னெடுக்கவும் உதவும் என பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
