நாட்டின் பல பகுதிகளில் கனமழை; சிவப்பு எச்சரிக்கை அமல்
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றரை மீறிய கனமழை பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக இடம்பெயருமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதன்படி,
கண்டி மாவட்டம் – உடுதும்பர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர
கேகாலை மாவட்டம் – கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, அரநாயக்க
மாத்தளை மாவட்டம் – லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, இறத்தோட்டை
இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி
ஆகிய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை அமலில் உள்ளது.
மேலும், இரண்டாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவை:
பதுளை – ஹல்துமுல்ல
காலி – நியகம
கண்டி – மெததும்பர, பாததும்பர
மொனராகலை – படல்கும்புர
நுவரெலியா – நில்தண்டாஹின்ன, வலப்பனை, நோர்வூட், அம்பகமுவ
இரத்தினபுரி – கிரியெல்ல, கலவான, அயகம
இதற்கு மேலாக, முதலாம் கட்டத்தின் கீழ் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
