குருணாகலை பரகஹதெனிய ஹெல்மெட் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து


குருணாகலை மாவட்டத்தின் பரகஹதெனிய பகுதியில் அமைந்துள்ள ஹெல்மெட் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் இன்று (10) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த தொழிற்சாலை முழுமையாக தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.