இலங்கையில் தங்க விலையில் திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் மாற்றமடைந்து வருவதன் காரணமாக, இலங்கையிலும் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது. அந்த வகையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (18) தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி இலங்கையில், 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 49,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 44,940 ஆகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 42,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 392,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 359,520 ஆகவும் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
Tags:
இலங்கை
