காதலர் தினத்தில் தங்க விலையில் திடீர் உயர்வு


இன்று (14) நாட்டில் தங்கத்தின் விலையில் 5,000 ரூபாய் அளவிலான உயர்வு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தை போக்கு மற்றும் உள்ளூர் வர்த்தக நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

புதிய விலை நிலவரத்தின் படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 365,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 45,675 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.