சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் சாதனை!
கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் ஈழத்தைச் சேர்ந்தவரும் தற்போது இத்தாலி நாட்டின் போட்டியாளராக chef தனுராஜ் (தனு) ரவிராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற இவருக்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியில் 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலே தனுராஜ் ரவிராஜ் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியின் நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert - President Worldchefs (World Association of Chefs Societies), Dimitris Kyriakopoulos - President Culinary Professionals, George Damianou - Continental Director of Southern Europe, Roberto Beltramini - Chief of Judges, Christos Gkotsis - Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
