கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் பொறியியாளர் கைது
சுமார் 55 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று (10) கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஒரு அபிவிருத்தி திட்டத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய பொறியியலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணை
சந்தேகநபர், ஏர் அரேபியா நிறுவனத்தின் G9 502 என்ற விமானம் மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின் பயணப் பையில் இருந்து, ஈரானில் உள்நாட்டு பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட 36,860 ‘பஹ்மான்’ வகை சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போது, சந்தேகநபரை தடுத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
