குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் மீண்டும் வழமையாக செயல்பட தொடங்கியது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் வீசா சேவைகள் மீண்டும் வழமையான முறையில் செயல்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று, திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதை சரி செய்யும் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது அனைத்து செயல்பாடுகளும் முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Tags:
இலங்கை
