இலங்கையில் அதிரடியாக குறைந்த தங்க விலை: இன்று ஒரே நாளில் 5000 ரூபாய் வீழ்ச்சி!
இலங்கையில் இன்று (13) தங்கத்தின் விலை 5,000 ரூபாயால் குறைந்துள்ளது என்று அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் வணிக நிலவரங்களின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலைப்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது,
22 கரட் தங்க பவுண் ஒன்று 360,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் பொருட்டு, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 48,750 ரூபாய் மற்றும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,088 ரூபாய் விலையில் விற்பனைக்கு வருகிறது.
Tags:
இலங்கை
