மொரட்டுவையில் பரபரப்பு: ஆய்வகத்தில் இரசாயன வாயுவை சுவாசித்த 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
மொரட்டுவையில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் ஆய்வகப் பயிற்சியின் போது ஏற்பட்ட சம்பவத்தில், இரசாயனப் பொருள் சுவாசிக்கப்பட்டதன் காரணமாக எட்டு மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மாணவர்களின் உடல்நிலை தற்போது அபாயகரமானதாக இல்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை
